புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு!

0
7

இன்று (19) காலை புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் உள்ள 05 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

தலைவருமான “கணேமுல்ல சஞ்சீவ” எனப்படும் சஞ்சீவ குமார சமரரத்ன கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர், வழக்கறிஞர் போல் மாறுவேடமிட்டு நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இருப்பினும், துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற போது நீதி மன்ற வளாகத்தினுள் இருந்த பொதுமக்கள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தற்போது அனைவரும் இராணுவத்தினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டுக்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் சற்று நேரத்திற்கு முன்பு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

சம்பவத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான “கணேமுல்ல சஞ்சீவா” சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

கனேமுல்ல சஞ்சீவ இன்று (19) காலை பூசா சிறைச்சாலையில் இருந்து புதுக்கடை நீதிமன்றத்திற்கு வழக்கு ஒன்றிற்காக அழைத்து வரப்பட்டார்.

சட்டத்தரணி போல் வேடமணிந்த நபரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here