அரசாங்க அச்சக வளாகத்தில் பதற்றம் : கூரிய ஆயுதத்தால் தாக்க முயற்சி

0
47
Tension at the Government Printing Office premises: Attempted attack with a sharp weapon

📌காணொளி :- https://www.facebook.com/share/v/163RUCFRnk/
அரச அச்சகத் திணைக்களத்தில் (Government Printing Department) ஒரு பாதுகாப்பு அதிகாரிக்கும் ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காணைமாக அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், அரச அச்சகத் திணைக்களத்தில் உள்ள சிற்றுண்டிச்சாலையில் உணவு உட்கொள்ள முடியாது எனத் தெரிவித்து ஊழியர்கள், திணைக்களத்தின் வளாகத்திலிருந்து வெளியே செல்ல முற்பட்டுள்ளனர்.

இதன்போது அச்சகத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரி, அவர்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து தலைமை பாதுகாப்பு அதிகாரி கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here