ஆப்கானிஸ்தான், இந்துகுஷ் பகுதியில் நேற்று (31) இரவு 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் கடல் மட்டத்திலிருந்து 8 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தினால் இதுவரையில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியான நிலையில் தற்போது நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250 ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டு ஊடங்கள் தெரிவித்துள்ளன.




