
(செ.திவாகரன்)
நுவரெலியா மாவட்டம் கந்தபளை நோனா தோட்டம் வள்ளுவர் புரம் அருள்மிகு ஸ்ரீ அக்கினி காளி அம்மன் ஆலய புணராவர்த்தன அஷ்டபந்தன நவகுண்ட பக்ஷ சம்புரோக்ஷன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக பெருஞ் சாந்தி விழா 2025 ஏப்ரல் மாதம் 30 ம் திகதி புதன்கிழமை காலை 6 மணிக்கு விநாயகர் வழிப்பாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டது.
தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று வியாழக்கிழமை காலை 7.30 மணி முதல் விநாயகர் வழிபாடு,புண்ணியாக வாஜனம், அடியார்கள் விக்ரங்களுக்கு எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றுது .
மூன்றாம் நாளான நாளை வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் விநாயகர் வழிபாட்டுடன் கிரியைகள் ஆரம்பமாகி யாகசாலை பூஜைகள் என்பன காலை 10 மணி முதல் 10.15 மணி வரை நடைபெறும்
சுப முகூர்த்த வேளையில் அலங்கார தீபாராதனைகள் காட்டி பல்வேறு இசை வாத்தியங்கள் முழங்க அருள்மிகு ஸ்ரீ அக்னிகாளி அம்மனுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் மஹா கும்பாபிஷேக குட முழுக்கு விழா நடைப்பெற்று மகேஸ்வர பூஜையுடன் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்படவும் உள்ளது.



