Aaron Gajendran
திருகோணமலை நகரில் தற்போது செயல்பட்டு வரும் திரையரங்குகளில் ஒன்றான நெல்சன் சினிமா, நீண்டகாலமாக சரியான பராமரிப்பு இல்லாமல் மோசமான நிலையில் உள்ளது என்று கூறப்படுகிறது.





அங்கு உள்ள இருப்பிடங்கள், சுவர்கள், தரை, உள் அமைப்பு மற்றும் பொதுக் கழிப்பறைகள், பல நாட்களாக சுத்தம் செய்யப்படாமல் இருப்பது மக்களை பெரிதும் சிரமப்படுத்தி வருகிறது.
பொதுவாக ஒவ்வொரு காட்சியும் முடிந்தவுடன் திரையரங்குகளில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். ஆனால், குறித்த திரையரங்கில் பராமரிப்பு பணிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்பது புகைப்படங்களிலும் தெளிவாகத் தெரிகிறது.
இதனால், திரையரங்கிற்கு வருவோரிடையே சுகாதார பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது குறித்த பிரதேச சுகாதார அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




