
அட்டாளைச்சேனை தேசியப் பாடசாலையில் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு, “புத்தகம் வாசிப்போம் – உலகை வெல்வோம்” என்ற தொனிப்பொருளில் நூலக வாசிப்பு வாரம் கடந்த திங்கட்கிழமை வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வு, கல்லூரியின் அதிபரும் சட்டத்தரணியுமான அல்-ஹாஜ் ஏ.எல்.எம் பாயிஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன் பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. எம். அப்துல் றஸ்ஸாக் அவர்கள் கலந்து கொண்டார்




நிகழ்வின் போது, மாணவர்களிடம் வாசிப்பின் முக்கியத்துவம், மேலும் நூலகத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்துவது குறித்து வலியுறுத்தப்பட்டதுடன் மாணவர்கள் புத்தகங்கள் மூலம் தமது அறிவை விரிவுபடுத்திக் கொண்டு உலகை வெல்லும் வழிமுறைகள் குறித்து பல முக்கிய கருத்துக்கள் பகிரப்பட்டன.
மேலும், இந்நிகழ்வை விளையாட்டு திட்டமிடல் மற்றும் கல்விசாரா நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான பிரதி அதிபர் திரு. எம்.எச் றசாம் அவர்கள் பொறுப்பேற்று நெறிப்படுத்தியதோடு கல்லூரி நூலகத்தின் பொறுப்பாசிரியராக பணியாற்றும் திரு. எம்.ஐ.எல் நஜிமுதீன் மற்றும் நூலக உதவியாளர்கள் எஸ்.எல் அபுல் ஹசன் மற்றும் எம்.எஸ் ஐனுல் ஷாபாயா ஆகியோர் இணைந்து இந்நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்து வெற்றிகரமாக நடத்தினர்.



