GAFSO அமைப்பினால் மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் களவிஜய செயற்றிட்டம்

0
17
Field Visit Initiative by GAFSO to Strengthen Religious Harmony

இளைஞர்–யுவதிகளின் திறன்களை கண்டறிந்து அவர்களை வலுவூட்டுவது, மேலும் இலங்கையில் நிலவும் நான்கு மதங்களைச் சேர்ந்த இளைஞர்களிடையே இன நல்லுறவும் புரிந்துணர்வும் ஏற்படுத்துவது என்ற முக்கிய நோக்கங்களுடன் GAFSO அமைப்பு முன்னெடுத்து வரும் மத நல்லிணக்க செயற்திட்டத்தின் முதல் கட்ட களவிழா 23.11.2025 அன்று வெற்றிகரமாக நடைபெற்றது.

GAFSO முகாமைத்துவ பணிப்பாளர் A. J. காமில் இம்டாட் அவர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் மேலாண்மையில், அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நான்கு இனங்களையும் சேர்ந்த சுமார் 50 இளைஞர்–யுவ திகள் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தாந்தோன்றீஸ்வரர் சிவன் ஆலயத்திற்குக் களவிழா மேற்கொண்டனர்.

இந்த விஜயத்தின் போது ஆலய பரிபாலன சபை செயலாளர் மற்றும் பட்டிப்பளை மத்தியஸ்த உறுப்பினரான கங்காதரன் அவர்களுடன் இளைஞர்களுக்கிடையில் நடைபெற்ற உரையாடல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இளைஞர்கள் முன்வைத்த பல கேள்விகளுக்கும் அவர் மத நல்லிணக்கத்தையும் இன ஒற்றுமையையும் முன்னிறுத்தி அருமையான விளக்கங்கள் வழங்கினார்.

அத்துடன், அட்டாளைச்சேனை நல்லிணக்க சபையின் தலைவர் I. L. ஹாஷிம் ஸாலிஹ் வளவாளராக கலந்து கொண்டு இளைஞர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு உரைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கி நிகழ்வை சிறப்பித்தார்.

மேலும், சம்மாந்துறை பிரதேசச் செயலகத்தின் சமூக சேவை உத்தியோகத்தர் A. அகமட் சபீர் அவர்கள் இக் களவிழாவில் கலந்து கொண்டு மத நல்லிணக்கத்தின் முக்கியத்துவம் குறித்த பெறுமதியான கருத்துகளைப் பகிர்ந்ததுடன், இவ்வாறான களப்பயணங்கள் இளைஞர்களுக்குப் பெரும் ஊக்கமாக அமைகின்றன எனவும் தெரிவித்தார்.

இக் களவிழாவை GAFSO அமைப்பின் கள உத்தியோகத்தர்களான M. R. ரச்னி முஹம்மட், G. டொஜானி மற்றும் குழுவினரின் சிறப்பான ஒருங்கிணைப்பும் மேற்பார்வையும் நிகழ்வை வெற்றிகரமாக்கியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here