கேகாலை பகுதியில் இரு பஸ்கள் மோதி விபத்து – 26 பேர் காயம்!

0
27
two buses collide in kegalle area 26 people injured

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் மோதிக்கொண்டதில் இன்று காலை விபத்து ஏற்பட்டுள்ளது.

கேகாலை, கலிகமுவ, அம்பன்பிட்டிய பகுதியில் இன்று அதிகாலை 5.00 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதுடன் 26 பேர் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கேகாலையில் இருந்து இரத்தினபுரி நோக்கி பயணித்த தனியார் பஸ், வேரகொடயிலிருந்து கேகாலை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here