எகிப்தில் காசா அமைதி பேச்சுவார்த்தை தொடக்கம்

0
11
Gaza peace talks begin in Egypt

எகிப்தில் காசா போருக்கு முடிவு காணும் நோக்கில் அமெரிக்காவின் அமைதி திட்டம் தொடர்பான மறைமுக பேச்சுவார்த்தைகள் எகிப்தின் ஷார்ம் எல்-ஷேக் நகரில் நடைபெற்று வருகின்றன.

இந்த பேச்சுவார்த்தையின் மூலம் அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளும், பாலஸ்தீன கைதிகளும் விடுவிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் ஹமாஸ் அமைப்பு, அமைதி திட்டத்தின் சில முன்மொழிவுகளுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும், சில முக்கிய கோரிக்கைகளுக்கு இதுவரை பதில் அளிக்கவில்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, சிறைப்பட்டவர்களின் விடுதலை குறித்து எதிர்வரும் சில நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என நம்புவதாக இஸ்ரேல் பிரதமர் கடந்த சனிக்கிழமை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here