நைஜீரியாவில் விமானப்படை மேற்கொண்ட தாக்குதல் தவறாக பொதுமக்கள் மீது விழுந்ததால், 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில், போர்னோ மாநில எல்லைக்கு அருகிலுள்ள யோபே மாநிலத்தின் ஒரு கிராமத்தில் கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 11) சந்தை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, சந்தையில் பலர் கூடியிருந்த நிலையில் இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தகவல்களின் படி, பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்த வேண்டிய நைஜீரிய விமானப்படை, தவறுதலாக அந்த சந்தை பகுதிக்கே குண்டுவீச்சு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலில், குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர்.த நைஜீரிய அதிகாரிகள், இது ஒரு தவறான தாக்குதல் (mistaken strike) என
இந்தச் சம்பவம் குறித்து பின்னர் கருத்து தெரிவித்ஒப்புக்கொண்டுள்ளனர். எனினும், இலக்கை அடையாளம் காண்பதில் எவ்வாறு பிழை ஏற்பட்டது என்பது தொடர்பில் இதுவரை தெளிவான விளக்கம் வழங்கப்படவில்லை.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான அதிகாரப்பூர்வ விசாரணை அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நைஜீரியாவின் வடகிழக்கு பகுதிகளில், பாதுகாப்புப் படைகளுக்கும் போகோ ஹராம் எனப்படும் ஆயுத ஜிகாதி அமைப்பிற்கும் இடையே தொடர்ந்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்த மோதல்களின் காரணமாக, பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வாழ வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.




