ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து கொள்ளும் கலந்துரையாடல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைவது தொடர்பான கலந்துரையாடல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. எம்முடைய நோக்கம் ஐக்கிய தேசிய கட்சியுடன் மாத்திரம் இணைந்து கொள்ளும் குறுகிய நோக்கம் அல்ல.
நாம் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்தவர்கள். வலதுசாரி பொருளாதாரத்தை நம்புபவர்கள்.அந்த வகையில் வலதுசாரி தரப்பினர் ஒன்றிணைய வேண்டும் என நம்புபவர்கள்.
வலதுசாரி அணிகள் பிளவுபடும் போது 25 இலட்சம் பேர் வரை வாக்களிப்பதற்கு வாக்குச்சாவடிக்கு செல்வதில்லை.
வலது சாரி கொள்கையை வெற்றிபெற செய்ய வேண்டும் என்றால் வலதுசாரி கொள்கை உடையவர்களை வாக்குச்சாவடிக்கு கொண்டு செல்ல கூடிய நிலை ஏற்பட வேண்டும்.அந்த வகையில் நோக்கும் போது வலது சாரி அணியினரை அணிதிரட்டும் முயற்சி என்பது வலதுசாரி அணியில் உள்ள திருடர்களை கூட்டுச்சேர்ப்பதல்ல. அதை குழப்பிக்கொள்ள வேண்டாம் என தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.




