இன்று முதல் மின்வெட்டு இல்லை

0
8
No power outage from today

இன்று (14) முதல் சுழற்சி முறையிலான நாளாந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை, தேசிய மின்சார அமைப்பில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வு காரணமாக, நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தில் உள்ள மூன்று மின் பிறப்பாக்கிகள் செயலிழந்திருந்தன. 

இதன் விளைவாக, மின்சார தேவையை நிர்வகிக்க முடியாததால், திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் ஒன்றரை மணி நேர மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்தது. 

இருப்பினும், பௌர்ணமி தினம் என்பதால் நேற்று முன்தினம் (12) குறைந்த மின்சார தேவையை சமாளிக்க முடிந்ததால், மின்வெட்டு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. 

இதற்கிடையில், நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்தில் உள்ள மூன்று மின் பிறப்பாக்கிகளில் ஒன்று சரிசெய்யப்பட்டு, தற்போது தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. 

இதன் உடாக 300 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புக்கு பெறப்படுகிறது. 

இந்நிலையில், தடையற்ற மின்சார விநியோகத்தில் ஏற்படும் இடையூறுகளைச் சமாளிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதால், இன்று முதல் நாளாந்த மின்வெட்டை அமல்படுத்துவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here