களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயஸ்வத்த பகுதியில் கடந்த 15 ஆம் திகதி கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் களுத்துறை குற்றப்புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நேற்று (18) இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 24 மற்றும் 32 வயதுடைய களுத்துறை தெற்கு பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




