15 மாதங்களாக காசாவில் நடந்த இனப்படுகொலை குறித்த ஊடக அறிக்கை!

0
43
Media report on the genocide that has been going on in Gaza for 15 months!

2023 அக்டோபர் 7 சனிக்கிழமை தொடங்கி 2025 ஜனவரி 18 சனிக்கிழமை வரை, 470 நாட்கள் தொடர்ச்சியான இனப்படுகொலையின் போது பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பால் செய்யப்பட்ட குற்றங்களை ஆவணப்படுத்தும் புதுப்பிக்கப்பட்ட அறிக்கை!

  • 15 மாதங்களில் காஸா மீது 100,000 டன் வெடிபொருட்கள் வீசப்பட்டுள்ளன.
  • 470 நாட்கள் தொடர்ச்சியான இனப்படுகொலை.
  • இஸ்ரேலிய ஆக்கிரமிப்பால் 10,100 பேர் படுகொலை.
  • கொல்லப்பட்டோர் மற்றும் காணாமல் போனோர் 61,182.
  • கிடைக்கப்பெற்ற உடல்கள் 46,960.
  • பாலஸ்தீன குடும்பங்களை குறிவைத்து 9,268 படுகொலைகள்.
  • முற்றிலுமாக அழிக்கப்பட்ட குடும்பங்கள் 2,092
  • உறுப்பினர்களை இழந்த குடும்பங்கள் 5,967
  • 4,889 குடும்பங்கள் ஒருவரைத் தவிர மற்ற அனைவரையும் இழந்தன, இதன் விளைவாக 8,980 தியாகிகள் உயிரிழந்தனர்.

குழந்தைகள் மற்றும் பெண்கள்

  • 7,861 குழந்தைகள் கொல்லப்பட்டன.
  • வயிற்றினுள் வைத்து கொல்லப்பட்ட குழந்க்ஹைகள் 214
  • ஒரு வயதுக்குட்பட்ட 808 குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
  • கொல்லப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 12,316
  • 13,901 பேர் விதவைகளானர்.
  • தாய், தந்தை கொல்லப்பட்டு அநாதைகளான குழந்தைகள் 38,495.
  • கொல்லப்பட்ட மாணவர்கள் 12,800.
  • கொல்லப்பட்ட ஆசிரியர்கள் 760
  • தூக்கிலிடப்பட்ட கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் 150.
  • கல்வியை முற்றாக இழந்த மாணவர்கள் 785,000
  • 785,000 மாணவர்கள் கல்வியை இழந்தனர்.

அழிக்கப்பட்ட உள்கட்டமைப்புகள்

  • 216 அரசு கட்டிடங்கள் அழிக்கப்பட்டன.
  • 137 பாடசாலை மற்றும் பல்கலைக்கழகங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன.
  • 823 மசூதிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன.
  • 158 மசூதிகள் சேதமடைந்தன.
  • 3 தேவாலயங்கள் குறிவைக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
  • 19 கல்லறைகள் அழிக்கப்பட்டன.
  • 161,600 தொடர் மாடி வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன.
  • 82,000 தனி வீடுகள் வசிக்கத் தகுதியற்றதாகிவிட்டன.
  • 194,000 வீடுகள் பகுதியளவு சேதமடைந்தன.
  • காசா கல்லறைகளில் இருந்து 2,300 உடல்கள் திருடப்பட்டன.

துறைக சார் பாதிக்கப்புக்கள்

  • 1,155 மருத்துவ பணியாளர்கள் கொல்லப்பட்டனர்.
  • 94 சிவில் பாதுகாப்பு பணியாளர்கள் கொல்லப்பட்டனர்.
  • 205 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்.
  • நிவாரணக் குழுக்கள் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த 736 உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.
  • 400 பத்திரிகையாளர்கள் காயமடைந்தனர்.
  • 220 தங்குமிடங்கள் ஆக்கிரமிப்பால் குறிவைக்கப்பட்டன.

சுகாதார நிலை

  • காசாவிற்கு வெளியே 12,700 காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை தேவை.
  • 12,500 புற்றுநோய் நோயாளிகளுக்கு சிகிச்சை தேவை.
  • 3,000 நோயாளிகளுக்கு வெளிநாட்டில் அவசர மருத்துவ சிகிச்சை தேவை.
  • இடப்பெயர்ச்சி நிலைமைகள் காரணமாக 2,136,026 தொற்று நோய்கள் உள்ளன.
  • சுகாதாரமற்ற சூழ்நிலைகள் காரணமாக 71,338 ஹெபடைடிஸ் வழக்குகள்.
  • சுகாதாரப் பாதுகாப்பு இல்லாததால் 60,000 கர்ப்பிணிப் பெண்கள் ஆபத்தில் உள்ளனர்.
  • மருந்துகளின் தடங்கல் காரணமாக நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட 350,000 நோயாளிகள் ஆபத்தில் உள்ளனர்.

மனிதாபிமான பேரழிவுகள்

  • 2 மில்லியன் மக்கள் தங்கள் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்தனர்.
  • 110,000 கூடாரங்கள் இனி பயன்படுத்த முடியாதவை.
  • பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் 44 இறப்புகள்.
  • கடுமையான குளிரில் இருந்து 7 குழந்தைகள் உட்பட 8 இறப்புகள்.
  • 360 மருத்துவ பணியாளர்கள், 3 மருத்துவர்கள் உட்பட 6,600 பேர் கைது செய்யப்பட்டு சிறைகளுக்குள் தூக்கிலிடப்பட்டனர்.
  • 48 பத்திரிகையாளர்கள் மற்றும் 26 சிவில் பாதுகாப்பு பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here