சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபகரும் ஆசிரியருமான லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 16 ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
பொரளை பொதுமயானத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் விசேட பிரார்த்தனைகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் லசந்த விக்கிரமதுங்கவின் குடும்பத்தார்இ அரசியல் பிரமுகர்கள்இ சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா , ரவி கருணாநாயக்க ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டனர்.




