செம்மணியில் மேலும் 12 எலும்புக்கூடுகள் அடையாளம்

0
19
12 more skeletons identified in Semmani

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய அகழ்வின் போது புதிதாக 12 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள் அகழ்வு நேற்று (31) இடம்பெற்றது.

நேற்றைய அகழ்வின் போது 12 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 209 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 11 மனித எலும்புக்கூடுகள் நேற்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் செம்மணி புதைகுழியில் இருந்து இதுவரை 191 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here