காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம் இன்று

0
10
Today is the International Day of the Disappeared.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினமாக ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 30ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

உலகெங்கும் காணாமல்போன பல்லாயிரக் கணக்கானோர் மற்றும் அவர்கள் பற்றிய தகவல்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கும் அவர்களது உறவினர்களின் துயரம் குறித்து கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தத் தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

போர், அரசியல், வன்முறை இன்னும் சில காரணங்களால் உலகம் முழுவதும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் துயரம் குறித்து கவனத்தை ஈர்க்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையினால் 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் திகதி சர்வதேச காணாமல் போனோர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.

இலங்கையில் 1983ஆம் ஆண்டு முதல் 2009 வரை நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது சுமார் 140,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொது மக்கள், ஊடகவியலாளர், மனித உரிமை ஆர்வலர்கள், இராணுவத்தினர், போராளிகள் மற்றும் இராணுவத்திடம் சரணடைந்த பலரும் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

எனினும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எவரும் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டதாகவோ அல்லது இறந்ததாகவோ இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

இந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவினர்களை மீட்பதற்காக அவர்களின் உறவினர்கள் இலங்கையில் பல ஆண்டுகளாக போராட்டங்களை நடத்தப்பட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here