ஞானசார தேரருக்கு 9 மாத சிறை -கொழும்பு நீதவான் நீதிமன்றம்

0
48

இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 9 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.

கிருலப்பனை பகுதியில் 2016 ஜூலை 16 அன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது “இஸ்லாமிய புற்றுநோய்” துடைக்கப்பட வேண்டும். என்ற அறிக்கையின் மூலம் சமூகங்களிடையே நல்லிணக்கத்தை மீறும் வகையில் செயற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட குறித்த தேரர் 291 தண்டனைச் சட்ட பிரிவின் கீழ் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here