சேனாநாயக்க சமுத்திரத்தின் 5 வான் கதவுகள் திறப்பு

0
46
Opening of 5 sluice gates of Senanayake Samudra

கனமழை காரணமாக சேனாநாயக்க சமுத்திரத்தின் 5 வான் கதவுகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, நீர்த்தேக்கத்தைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கானமழை காரணமாக மகாவலி ஆற்றுப் படுகையின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

அதன்படி, திம்புலாகல, ஈச்சிலம்பற்று, ஹிங்குராக்கொட, கந்தளாய், கிண்ணியா, கோறளைப்பற்று, வடக்கு லங்காபுர, மெதிரிகிரிய, மூதூர், சேருவில, தமன்கடுவ, தம்பலகாமம் மற்றும் வெலிகந்த ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளின் மகாவலி ஆற்றின் கரையோர தாழ்நிலப் பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here