அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நேற்று (2025.01.16) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச செயலகங்களுக்கான ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
A. ஆதம்பாவா அவர்களின் தலைமையில் பிரதேச செயலாளர் P.T.M இர்பான் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான MS.உதுமாலெப்பை, ஜனாதிபதி சட்டத்தரணி S. நிஸாம் காரியப்பர், MAM. தாஹிர், பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.மஜீட் மற்றும் துறைசார்ந்த திணைக்கள அதிகாரிகள் , விடயங்களுக்கு பொறுப்பான பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள், அரசியல் பிரமுகர்கள், விவசாய பிரதிநிதிகள், ஊர் பிரமுகர்கள், சமூக மட்ட குழுவினர் மற்றும் ஊடகவியலாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு தங்களது ஆக்க பூர்வமான கருத்துக்களையும் முன்வைத்தனர்.
மேலும் பிரதேச எல்லைக்குட்பட்ட சிறந்த திட்டங்களை மக்களின் தேவை கருதி முன்னெடுக்கப்பட வேண்டிய அவசியத்தினையும் கெளரவ பாராளுமன்ற உறுப்பினரும், ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான A.ஆதம்பாவா அவர்கள் பிரதேச செயலாளருக்கும், உரிய திணைக்கள தலைவர்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கினார்.




