மட்டக்களப்பில் CNA SL னால் தாதி உத்தியோகத்தர்களுக்கான விசேட பயிற்சி நெறி நடைபெற்றது

0
29
CNAS conducts special training course for nursing officers in Batticaloa

Stoma மற்றும் காயம் பராமரிப்பு தொடர்பான விசேட பயிற்சிநெறி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இம்மாதம் 10 மற்றும் 11ம் திகதிளில் Clinical Nurses Association of Sri Lanka (CNA-SL) அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இந்த இரு நாள் விசேட பயிற்சி அமர்வின் போது சர்வதேச ரீதியில் பயிற்சி பெற்ற ஸ்டோமா மற்றும் நாட்பட்ட காயங்களை பராமரிக்கக் கூடிய விசேட தகுதி வாய்ந்த வளவாளர்கள் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் விசேட வைத்திய நிபுணர்கள் ,கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட விரிவுரையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இப்பிராந்தியத்தில் நாள்பட்ட ,தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கின்ற அதே சமயம் கொலஸ்ட்ரமி மற்றும் நாட்பட்ட சீனிக் காயங்கள் (Colostomy, Tracheostomy ,Chronic Diabetic Ulcers) போன்றவற்றை பிரத்தியேகமாக பராமரிப்பதற்கான விசேட பயிற்சி பெற்ற தாதிய உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை நிலவுகின்ற காரணத்தினால் Clinical Nurses Association of Sri Lanka இன் பெரு முயற்சியினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் மூலம் இப்ப பிராந்தியத்தில் உள்ள நோயாளர்கள் பராமரிப்பில் கணிசமான அளவு முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

செய்முறையுடன் கூடிய இப்பயிற்சி நெறியில் நாடளாவிய ரீதியிலான சுமார் எழுபது தாதிய உத்தியோகத்தர்கள் கலந்து பயனுற்றார்கள். பயிற்சியில் முடிவில் பெறுமதியான சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு போன்றவை வழங்கி வைக்கப்பட்டன.

Clinical Nurses Association of Sri Lanka அமைப்பின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி ,தாதிய உத்தியோகத்தர் மற்றும் உளவளத்துணையாளரான M.I.Umar Ali JP. அவர்கள் இந்நிகழ்வில் வளவாளர் ஒருவராக கலந்து கொண்டு “தரமான தாதிய பராமரிப்பில் தாதியர்களது நடத்தை எவ்வாறு செல்வாக்கு செலுத்துகின்றது”என்ற தொனிப்பொருளில் உரையாற்றினார்.

அகில இலங்கை கிளினிக்கல் நர்சிங் அசோசியேஷன் அமைப்பானது முழு இலங்கையிலுள்ள தாதியர்களின் பயிற்சி திறன் இயலுமை போன்றவற்றை மேம்படுத்துவதற்கான ஒரு பொது அமைப்பாகும். இந்த அமைப்பு நாடளாவிய ரீதியில் பல்வேறுபட்ட திட்டங்களை எதிர்காலத்தில் செயல்படுத்துவதன் மூலம் நாடெங்கிலும் உள்ள தாதிய உத்தியோகத்தர்களின் திறன் ஆற்றல் போன்றவற்றை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது என்றும் இதற்கு நாடளாவிய ரீதியில் உள்ள தாதிய உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று Clinical Nurses Association of Sri Lanka அமைப்பின் தலைவர் அன்வர் அஸாம் அவர்கள் கருத்து தெரிவித்ததுடன் இப்ராந்தியத்தில் மட்டுமின்றி நாடெங்கிலும் சிறந்த தாதிய பராமரிப்பு பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பது எங்களது எதிர்கால கனவாக இருக்கின்றது. அதனை நனவாக மாற்றுவதற்காக நாங்கள் எடுத்த ஒரு முயற்சியின் பிரதி பலனாகவே இந்த இரு நாள் பயிற்சி அமர்வு இருந்தது என்றும் குறிப்பிட்டார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கயில் இந்த நிறுவனமானது தாதியர்களுக்கு மாத்திரம் பயிற்சி‌நெறிகளை வழங்கும் அமைப்பாக இல்லாமல் சமூகம் சார்ந்த நடவடிக்கைகளான முதலுதவிப் பயிற்சி, இலவச தாதிய முகாம், சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடாத்துவதற்குரிய திட்டங்களை வகுத்துள்ளது.அதன் முதல் கட்டமாக, வீதி விபத்துகளில் சிக்குண்டவர்களை முதன் முதலில் கையாளுபவர்கள் மிச்சக்கர வண்டி சாரதிகளாவார்கள். அவ்வாறு விபத்துக்குள்ளானவர்கள் சரியான முறையில் கையாளப்படாவிட்டால் அவர்களுக்கு வாழ்நாள் பூரான அங்கவீனம் மற்றும் தாக்கங்களில் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு, இவற்றைக் கருத்தில் கொண்டு எதிர்வரும் காலங்களில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான ஒரு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி கருத்தரங்கு ஒன்றை தமது அமைப்பு ஏற்பாடு செய்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். அது மட்டுமல்ல, மேலும் இந்த நிறுவனமானது தாதியர்களுக்கு மாத்திரம் பயிற்சி‌நெறிகளை வழங்கும் அமைப்பாக இல்லாமல் சமூகம் சார்ந்த நடவடிக்கைகளான முதலுதவிப் பயிற்சி, இலவச தாதிய முகாம், சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடாத்துவதற்குரிய திட்டங்களை வகுத்துள்ளது

இவ் அமைப்பின் தலைவர் அஸாம் அவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் பணிபுரிகின்ற ஒரு பட்டதாரி தாதிய உத்தியோகத்தராவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here