அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் 2018 க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் ஏற்பாடு செய்த வருடாந்த இப்தார் நிகழ்வும் 2K2 BENSI இன் உத்தியோகப்பூர்வ இலட்சணை மற்றும் t shirt வெளியீட்டு விழாவும் நேற்று அட்டாளைச்சேனை யாடோ வரவேற்பு மண்டபத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது
நிகழ்வின் பிரதம அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் M.S உதுமாலெப்பை , பாடசாலையின் முன்னாள் அதிபர் A.L கமுருதீன் மற்றும் தற்போதைய அதிபரான A.L.M பாயிஸ் ஆகியோர் கலந்து கொண்டதுடன் பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்
இந்நிகழ்வில் கலை , கலாச்சார அம்சங்களுடன் விசேட சொற்பொழிவு ஆற்றுகைப்படுத்தப்பட்டதுடன் 2K2 BENSI அமைப்பிற்கான வருடாந்த உறுப்பினர்களை தெரிவு செய்வற்கான வாக்கெடுப்பும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது











