இலங்கை மத்திய வங்கி ஓரிரவு கொள்கை வீதத்தை (OPR) 8.00% ஆக பராமரிக்க நேற்று இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாடு, பணவீக்கம் 5% என்ற இலக்கை நோக்கி நகர்வதை உறுதி செய்யும் அதே வேளையில், உள்நாட்டு பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும் எனவும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய முன்னேற்றங்களை கவனமாக பரிசீலித்த பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுதாக தெரிவிக்கபட்டுள்ளது.
மேலும் பணவீக்க நிலைமைகள் மார்ச் 2025 முதல் படிப்படியாக தணியும் , 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பணவீக்கம் நேர்மறையாக மாறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது




