நாட்டில், 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சுகாதார அமைச்சு வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை, புதிய எயிட்ஸ் நோயாளர்கள் உட்பட மொத்தம் 6,740 பேர் பதிவாகியுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் 824 புதிய எச்.ஐ.வி தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,47 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், சுகாதார அமைச்சின் கீழ் செயற்படும் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம், நாட்டின் முழுவதும் உள்ள 41 சிகிச்சை மையங்கள் வழியாக இலவச மற்றும் இரகசிய சிகிச்சை சேவைகளை வழங்கி வருகிறது.
எயிட்ஸ் தொடர்பான ஆலோசனை அல்லது சிகிச்சைக்காக, பொதுமக்கள் +94 703 733 933 என்ற தேசிய ஹாட்லைன் எண்ணிற்கு தொடர்புகொள்வது கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது




