துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு

0
9
One person killed in shooting

நான்கு பொலிஸ் குழுக்களால் கொட்டாஞ்சேனை பெனடிக்ட் மாவத்தை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன
கொட்டாஞ்சேனை பெனடிக்ட் மாவத்தை பகுதியில் நேற்று இரவு 7.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இனந்தெரியாத நபர்கள் இருவரால் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ரி-56ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் செல்வது அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 43 வயது நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.உயிரிழந்தவர் கொழும்பு 13, ஜம்பட்டா வீதியை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here