திட்டமிட்ட வகையில் தன்மீது சேறுபூசும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சுனில் செனவி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
என்னுடைய நண்பர் ஒருவர் சிங்கராஜ வனத்தில் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரப்பப்பட்டுள்ளது. உண்மையில் என்னைத் தொடர்புபடுத்தி கூறப்படும் நபருடன் எனக்கு எந்தவித தொடர்பும் கிடையாது.
திட்டமிட்ட வகையில் சேறுபூசும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இவ்வாறான கருத்துப் பரிமாற்றங்களால் எனக்கும் அரசாங்கத்துக்கும் இழுக்கு ஏற்பட்டுள்ளது.
ஆதலால், இந்த விடயம் குறித்து பொலிஸ் திணைக்களத்தின் கணனி விசாரணைப் பிரிவுக்கு முறைப்பாடு செய்துள்ளேன். என்மீது அவதூறு பரப்பியோரை கைதுசெய்து சட்டத்தின்முன் நிறுத்தப்பட வேண்டும்.




