உள்ளூராட்சி தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் இதுவரை 25 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கடந்த 3 ஆம் திகதி தொடக்கம் இன்று காலை 6மணிவரையான காலப்பகுதியிலேயே குறித்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேர்தலுடன் தொடர்புடைய மற்றும் தேர்தல் சட்ட மீறல்கள் உள்ளடங்கலாக 283 முறைப்பாடுகள் இதுவரையில் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது



