வேட்பாளர்களை வரவேற்கும்நிகழ்வு இன்று கொட்டிகாவத்தயில்இடம்பெற்றது!

0
5

கொலன்னாவ நகரசபை மற்றும் கொட்டிகாவத்த முல்லேரியாவ பிரதேசசபையில் போட்டியிடும் வேட்பாளர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று கொட்டிகாவத்தயில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதியமைச்சர் எரங்க குணசேகர கலந்து கொண்டார்.

இங்கு பிரதேச மக்களால் வேட்பாளர்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டதுடன், பிரதியமைச்சர் எரங்க குணசேகர இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
நாங்கள் பிரஜை என்ற வகையில் வெற்றியீட்டி 04 மாதங்கள் ஆகின்றது இலங்கையில் முதற்தடவையாக ஊழல்மோசடியான ஆட்சியை நாம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம்.

அரசியலில் மாற்றமொன்றை ஏற்படுத்தி மக்களின் விருப்பில் நாங்கள் 04 மாதங்களிற்குள் ஜனநாயகத்தை பாதுகாத்திருக்கிறோம்.
04 மாதங்களில் நாங்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறோம். ஜனநாயக அரசியல் மேற்கொள்ள நாங்கள் இடமளித்திருக்கிறோம். கடந்த காலங்களில் அது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இருந்தன.

தலைமறைவாகியிருந்த முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் குறித்து இன்று என்ன இடம்பெற்றிருக்கின்றது. தேசிய மக்கள் ஆட்சியின் கீழ் நீதியை நிலைநாட்டியிருக்கின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here