உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்கள் மது அருந்துதலால் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் மட்டும் ஒவ்வொரு நாளும் 40க்கும் மேற்பட்டோர் மது அருந்துதலால் ஏற்படும் நோய்களால் அகால மரணம் அடைகின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டு நிதியம் நடத்திய ஆய்வின் படி, 2023ஆம் ஆண்டுக்குள் இலங்கையில் மது அருந்துவதால் ஏற்பட்ட சுகாதார மற்றும் பொருளாதாரச் செலவுகள் ரூ. 237 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளன
உலக மது ஒழிப்பு தினத்தின் நோக்கம்
மது அருந்துவதால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள், வன்முறை, விபத்துகள் மற்றும் பிற சமூகப் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது.
மது அருந்தாமையின் நன்மைகளைப் பரப்புவது மற்றும் மது அருந்தாத சூழலை ஊக்குவிப்பது.
மது அடிமைத்தனம் போன்ற நோய்களுக்கான மருத்துவ உதவியை நாட மக்களை ஊக்குவிப்பது.1




