இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் நெதர்லாந்து தூதரகத்துடன் இணைந்து நடாத்தும் உலக ஊடகப் புகைப்படக் கண்காட்சி யாழ்ப்பாண திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் இன்றைய தினம் ஆரம்பமானதுடன் இந்த கண்காட்சி எதிர்வரும் 27ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் காலை 10:00 மணி முதல், இரவு 07:00 மணி வரை இப் புகைப்படக் கண்காட்சி இடம்பெறவுள்ளது.புகைப்பட ஊடகவியலில் சர்வதேச விருதுகளை வென்ற புகைப்படங்கள் உட்பட, புகைப்படத்தினூடு கதை சொல்லும் பல புகைப்படங்கள் இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
இலங்கைக்கான நெதர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் ஆரம்பமாகிய இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைக்கான நெதர்லாந்து தூதரகத்தின் பிரதித் தூதுவர் கலந்துக்கொண்டிருந்தார்.
மேலும் யாழ். இந்திய துணைத் தூதுவர் சாய்முரளி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், நெதர்லாந்து தூதரகத்தினர் மற்று பார்வையாளர்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




