தலைமன்னார் – கொழும்பு ரயில் சேவை நாளை முதல் ஆரம்பம்

0
21
கொழும்புக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான ரயில் சேவை சுமார் 11 மாதங்களின் பின்னர் மீண்டும் நாளை 12ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.
 
இந்நிலையில் நாளையதினம் மாலை 4:15 மணிக்கு முதலாவது ரயில் சேவை கொழும்பு கோட்டையிலிருந்து தலைமன்னாருக்கு இடம்பெறுமென, ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே தெரிவித்தார்.
 
ரயில் சேவை நேர அட்டவணைக்கிணங்க மேற்படி ரயில் மாலை 4. 15 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்பட்டு இரவு 9.50 மணியளவில் தலைமன்னார் ரயில் நிலையத்தை சென்றடையுமெனவும், அவர் மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here